உடன்குடிபகுதியில் தென்னை, பனையுடன் ஊடுபயிா் செய்து அசத்திய விவசாயிகள்


உடன்குடிபகுதியில்   தென்னை, பனையுடன் ஊடுபயிா் செய்து அசத்திய விவசாயிகள்
x
தினத்தந்தி 27 Oct 2022 12:15 AM IST (Updated: 27 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

உடன்குடிபகுதியில் தென்னை, பனையுடன் ஊடுபயிா் செய்து விவசாயிகள் அசத்தி உள்ளனர்.

தூத்துக்குடி

உடன்குடி:

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியில் தென்னை, பனை விவசாயத்துடன் ஊடுபயிராக மரவள்ளி கிழங்கு, சப்போட்டோ, வாழை, முருங்கை ஆகியன ஊடுபயிராக பயிரிட்டு விவசாயம் சுறுசுறுப்பாக நடைபெறுகிறது. உடன்குடி வட்டார பகுதியில் தற்போது பருவமழை ஆங்காங்கே விட்டுவிட்டு பெய்வதால் உடன்குடி வட்டார பகுதியான உடன்குடி, பரமன்குறிச்சி, வெள்ளாளன்விளை, சீர்காட்சி, பிச்சிவிளை வாகவிளை, மெய்யூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் வறட்சியை தாங்கும் தென்னை, பனை விவசாயத்துடன் ஊடுபயிராக முருங்கை, மரவள்ளி கிழங்கு, வாழை, சப்போட்டோ, மா பயிரிட்டு விவசாயிகள் விவசாயத்தை மேம்படுத்தி வருகின்றனர்.

மேலும் சொட்டு நீர் பாசனம் மூலமும் விவசாயத்தையும் விரிவாக செய்து வருகின்றனர். இப்பகுதியில் எந்தவிதமான குளத்து பாசனமோ, கால்வாய் பாசனமோ கிடையாது. முழுக்க முழுக்க கிணற்றுநீர் பம்பு செட் பாசனம் மட்டும் தான் இப்பகுதியில் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story