உடன்குடி பேரூராட்சியில்குப்பை வண்டிகள் தொடக்க நிகழ்ச்சி
உடன்குடி பேரூராட்சியில் குப்பை வண்டிகள் தொடக்க நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி
உடன்குடி:
உடன்குடி தேர்வு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளிலும் மின்சார பேட்டரி மூலம் இயங்கும் 18 குப்பை வண்டிகள் வாங்கப்பட்டது. இவற்றை பேரூராட்சி செயல் அலுவலர் பாபு முன்னிலையில் பேரூராட்சி தலைவர் ஹூமைரா அஸ்ஸஸாப்கல்லாசி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள், பேரூராட்சி ஊழியர்கள்உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் இது பேரூராட்சி தலைவி கூறுகையில், உடன்குடி தேர்வு நிலை பேரூராட்சி பகுதியை குப்பையில்லாத நகரமாக மாற்றுவதற்கு தினமும் வீடுவீடாக சென்று குப்பைகளை சேகரிப்பதுடன், பேரூராட்சி பகுதியில் உள்ள குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரித்து உடனுக்குடன் அப்புறம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்றார்.
Related Tags :
Next Story