வால்பாறையில்கஞ்சா விற்ற வாலிபர் கைது


வால்பாறையில்கஞ்சா விற்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 10 Feb 2023 12:15 AM IST (Updated: 10 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை போலீசார் காந்தி சிலை பஸ் நிறுத்தம், பழைய பஸ் நிலையம், ஸ்டேன்மோர் சந்திப்பு பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர். ஸ்டேன்மோர் சந்திப்பு பகுதியில் வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு முன்பாக சந்தேகப்படும்படியாக நின்றிருந்தவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் வால்பாறை கக்கன்காலனி பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் (வயது 23) என்பதும், 150 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் தெரிவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.


Next Story