வானரமுட்டியில் கூடுதல் குடிநீர் குழாய் திறப்பு விழா


வானரமுட்டியில்  கூடுதல் குடிநீர் குழாய் திறப்பு விழா
x
தினத்தந்தி 11 Nov 2022 12:15 AM IST (Updated: 11 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

வானரமுட்டியில் கூடுதல் குடிநீர் குழாய் திறப்பு விழா நடந்தது.

தூத்துக்குடி

நாலாட்டின்புத்தூர்:

நாலாட்டின்புத்தூர் அருகே உள்ள வானரமுட்டி காந்தாரி அம்மன் கோவில் தெருவில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கூடுதல் குடிநீர் குழாய் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு வானரமுட்டி பஞ்சாயத்து தலைவர் இசக்கியம்மாள் தலைமை தாங்கினார். முன்னாள் யூனியன் கவுன்சிலர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கயத்தாறு யூனியன் தலைவர் மாணிக்கராஜா கலந்து கொண்டு குடிநீர் குழாயை திறந்து வைத்து பேசினார். தொடர்ந்து வானரமுட்டி - கோவில்பட்டி மெயின் ரோடு அருகே ரூ.37 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அவர் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் கயத்தாறு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அரவிந்தன், பானு, பொறியாளர்கள் பீர்முகம்மது, சித்ரா, ஓவர்சீயர்கள் பன்னீர்செல்வம், சிவன்ராஜ், ஊராட்சி செயலாளர் விஜி மற்றும் வார்டு உறுப்பினர்கள், சுற்றுவட்டார கிராம பஞ்சாயத்து தலைவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story