வானரமுட்டி கிராமத்தில் வேளாண்மை இணை இயக்குனர் ஆய்வு
வானரமுட்டி கிராமத்தில் வேளாண்மை இணை இயக்குனர் ஆய்வு செய்தார்.
நாலாட்டின்புத்தூர்:
நாலாட்டின்புத்தூர் அருகே உள்ள வானரமுட்டி கிராமத்தில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ள விவசாயிகளின் விளை நிலங்களை தூத்துக்குடி வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன், கயத்தாறு வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து அவர்கள் விவசாயிகளிடம் படைப்புழு தாக்குதல் வராமல் தடுப்பதற்கு விதைப்பதற்கு முன் கோடை உழவு செய்ய வேண்டும். ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடுதல் மற்றும் தையோமீத்தாக்சம் 4 மில்லி மருந்தை 1 கிலோ விதையுடன் கலந்து விதை நேர்த்தி செய்தல், சரியான இடைவெளியுடன் விதைத்தல், 15 முதல் 20 நாட்கள் வயதுடைய பயிர்களுக்கு புளுபெண்டியாபைட் 5 மில்லியும், 35 முதல் 40 வயதுடைய பயிர்களுக்கு மெட்டாரைசியம் அனிசோப்பிலே 80 கிராமும், 40 முதல் 60 நாட்கள் வயதுடைய பயிர்களுக்கு எமாமெக்டின்பெண்சோயேட் 4 கிராமும், 60 நாட்கள் மேல் வயதுடைய பயிர்களுக்கு நவலூரான் 10 மில்லி அல்லது ஸ்பினோடோராம் 5 மில்லி மருந்தை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து படைப்புழு தாக்குதலில் இருந்து மக்காச்சோள பயிர்களை பாதுகாக்கலாம் என தொழில்நுட்ப ஆலோசனைகளை விவசாயிகளுக்கு வழங்கி விளக்கி கூறினர்.