வண்டலூரில், அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்


வண்டலூரில், அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்
x
தினத்தந்தி 3 July 2023 12:15 AM IST (Updated: 3 July 2023 3:27 PM IST)
t-max-icont-min-icon

நாகை வண்டலூரில், அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி நாகை கலெக்டர் அலுவலகத்தில் அப்பகுதி பொதுமக்கள் மனு அளித்தனர்.

நாகப்பட்டினம்


நாகை வண்டலூரில், அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி நாகை கலெக்டர் அலுவலகத்தில் அப்பகுதி பொதுமக்கள் மனு அளித்தனர்.

குடிநீர் தட்டுப்பாடு

நாகை மாவட்டம் வண்டலூர் ஊராட்சி பரப்பனூர் கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நாகை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். அங்கு கலெக்டர் இல்லாததால் கூடுதல் கலெக்டர் ரஞ்சித் சிங்கை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்களது பகுதியில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் அடிப்படை வசதியான குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

காலம் தாழ்த்தாமல்

மின்விளக்கு வசதியும் போதுமானதாக இல்லை. மேலும் குளம், வாய்க்கால் உள்ளிட்டவை நீண்ட நாட்களாக தூர்வாரப்படாமல் உள்ளது.

கூலி வேலைக்கு செல்லும் ஏழை மக்கள் வாழும் எங்கள் பகுதியில் அடிப்படை தேவையான குடிநீர், மின்விளக்கு உள்ளிட்ட வசதிகளை செய்து தர வேண்டும். காலம் தாழ்த்தாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Next Story