வேதக்கோட்டைவிளையில்கிறிஸ்துமஸ் கீதபவனி
வேதக்கோட்டைவிளையில் கிறிஸ்துமஸ் கீதபவனி நடந்தது.
தூத்துக்குடி
உடன்குடி:
வேதக்கோட்டைவிளை தூய தோமாவின் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் கீத பவனி நடைபெற்றது. இதையொட்டி ஆலய வளாகத்தில் கட்டுரை போட்டி, பேச்சு போட்டி மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. சபை குரு ஜான் சாமுவேல் தலைமை வகித்து போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மேலும் இயற்கை வளங்களை பாதுகாக்கும் வகையில் செயற்கை இனிப்புகளை தவிர்த்து, இயற்கையான பனைமரத்து இனிப்புகளால் கிறிஸ்துமஸ் பலகாரங்கள் செய்ய வேண்டும், ஆலயம், வீட்டு அலங்காரங்களில் பிளாஸ்டிக்கை தவிர்த்து பனையோலையில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார். தொடர்ந்து வீடுகள் தோறும் கிறிஸ்துமஸ் சந்திப்பு நிகழ்ச் நடைபெற்றது.
Related Tags :
Next Story