வெயிலுகந்தபுரத்தில் புதிய ரேஷன்கடை திறப்பு விழா


வெயிலுகந்தபுரத்தில்  புதிய ரேஷன்கடை திறப்பு விழா
x
தினத்தந்தி 8 Oct 2022 12:15 AM IST (Updated: 8 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

வெயிலுகந்தபுரத்தில் புதிய ரேஷன்கடையை கடம்பூர் ராஜூ எம.எல்.ஏ. திறந்து வைத்தார்.

தூத்துக்குடி

நாலாட்டின்புத்தூர்:

கழுகுமலை அருகே குமரெட்டியாபுரம் பஞ்சாயத்து வெயிலுகந்தபுரத்தில் எம்.எல்.ஏ. ெதாகுதி மேம்பாட்டு நிதி ரூ.13 லட்சத்தில் புதிய ரேஷன்கடை கட்டப்பட்டுள்ளது. இந்த கடையை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். தொடர்ந்து குமரெட்டியாபுரத்தில் புதிய ரேஷன் கடைக்கு அவர் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வகுமார், கோவில்பட்டி ஆவின் தலைவர் தாமோதரன், கழுகுமலை அ.தி.மு.க. இளைஞரணி செயலாளரும், முருகன் கூட்டுறவு பண்டகசாலை தலைவருமான கருப்பசாமி, வானரமுட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் சுந்தர்ராஜ், செயலாளர் கோபாலகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர் ஜெயச்சந்திரன், கோவில்பட்டி நகராட்சி கவுன்சிலர் கவியரசன், அரசு ஒப்பந்தக்காரர் குட்டி என்ற மாரியப்பன், மாவட்ட வர்த்தகபிரிவு காமராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி, செட்டிக்குறிச்சி கிருஷ்ணசாமி, மின்வாரிய காண்டிராக்டர் கருப்பசாமி, காளாம்பட்டி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சீனிவாசராகவன், கிளை செயலாளர்கள் பாலமுருகன், சித்திரன், மாரியப்பன், சீனிவாசன், ராமானுஜம் கணேசன் மற்றும் வெயிலுகந்தபுரம் தெடக்கப்பள்ளி ஆசிரியர் சுடலைமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story