வேலிடுப்பட்டி கிராமத்தில்விவசாயிகளுக்கான சிறப்பு முகாம்
வேலிடுப்பட்டி கிராமத்தில் விவசாயிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
எட்டயபுரம்:
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் ஊரக வளர்ச்சித் துறை மற்றும் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளங்கள், கண்மாய்கள், நீர் நிலைகளில் வண்டல் மண், கரம்பை மண் உள்ளிட்டவற்றை விவசாயிகள் எடுப்பதற்கு விண்ணப்பம் செய்வதற்கான சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
அதன்படி விளாத்திகுளம் யூனியனுக்கு உட்பட்ட அனைத்து பஞ்சாயத்து பகுதிகளிலும் இந்த சிறப்பு முகாம் நடந்தது. இதில் வேலிடுப்பட்டி மற்றும் ஜமீன் கரிசல்குளம் ஆகிய கிராமங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமில் விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டனர். முகாமில் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் வேளாண்மை தோட்டக்கலை துறை அதிகாரிகள் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.