வெள்ளாளன்விளையில் சூதாடிய 2 பேர் கைது


வெள்ளாளன்விளையில் சூதாடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 11 July 2023 12:15 AM IST (Updated: 11 July 2023 2:51 PM IST)
t-max-icont-min-icon

வெள்ளாளன்விளையில் சூதாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

மெஞ்ஞானபுரம்:

மெஞ்ஞானபுரம் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகராஜ் தலைமையிலான போலீசார் வெள்ளாளன்விளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சீரணிச்சாலையில் போலீசாரைக் கண்டதும் 2 பேர் ஓடினர். போலீசார் அவர்களை துரத்தி பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் பணம் வைத்து சூதாடியதும், அவர்கள் வெள்ளாளன்விளையைச சேர்ந்த இம்மானுவேல், தினகரன் என தெரிய வந்தது. இதுகுறித்து மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 2 பேரையும் கைது செய்தனர்.


Next Story