விஜயாபுரி பகுதியில் செவ்வாய்க்கிழமை மின்தடை
விஜயாபுரி பகுதியில் செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படுகிறது.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் எம் சகர்பான் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விஜயபுரி உப மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் செய்யப்படுகின்ற செமப்புதூர் மின் தொடருக்கு மேல் குறுக்காக புதிதாக 400 கிலோ வோட் இருவழி மின்தொடர் அமைக்கப்பட உள்ளது. எனவே, 11 கிலோ வோட் செமப் புதூர் மின் தொடர் மூலம் மின் வினியோகம் செய்யப்படுகின்ற, உயர் அழுத்த மின் இணைப்பு எண் 360, 361 மற்றும் கசவன் குன்று, கொடுக்காம்பாறை, விஜயாபுரி ஆகிய பகுதிகளுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை மின்தடை செய்யப்படும், என தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story