விளாமுண்டி வனப்பகுதியில் காட்டுப்பன்றி இறைச்சியை வைத்திருந்த 2 பேருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்


விளாமுண்டி வனப்பகுதியில்  காட்டுப்பன்றி இறைச்சியை வைத்திருந்த 2 பேருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
x

காட்டுப்பன்றி இறைச்சி

ஈரோடு

விளாமுண்டி வனசரகத்துக்கு உள்பட்ட கோடேபாளையம் ஊசிவேல மர வனப்பகுதியில் வனச்சரக அதிகாரி செங்கோட்டையன் தலைமையில் வனவர் ஆறுமுகம், வனக்காப்பாளர்கள் கோபால், ஹரி விக்னேஷ் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து சென்றனர். அப்போது வனப்பகுதியில் 2 பேர் சந்தேகப்படும் வகையில் சாக்குப்பையுடன் நின்று கொண்டிருந்தனர். உடனே அவர்கள் 2 பேரையும் வனத்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், 'அவர்கள் கோவை மாவட்டம் செல்வபுரத்தை சேர்ந்த நடராஜ் (வயது 31), பவானிசாகர் அருகே உள்ள தொப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த கார்த்திக் (25) என்பதும், அவர்கள் 2 பேரும் வனப்பகுதியில் இறந்து கிடந்த காட்டுப்பன்றியை அறுத்து அதன் இறைச்சியை சாக்குப்பையில் போட்டு எடுத்து சென்றதும்,' தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 பேர் மீதும் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்ததுடன், அவர்களுக்கு மொத்தம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் அவர்கள் 2 பேரிடம் இருந்தும் காட்டுப்பன்றி இறைச்சியை வனத்துறையினர் பறிமுதல் செய்து வனப்பகுதியில் குழி தோண்டி புதைத்தனர்.


Next Story