விழுப்புரத்தில் 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல் போக்குவரத்து பாதிப்பு
விழுப்புரத்தில் 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்டன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
விழுப்புரம்
திருச்சி மார்க்கத்தில் இருந்து சென்னை நோக்கி பொக்லைன் எந்திரத்தை ஏற்றிக்கொண்டு நேற்று காலை ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச்சாலையில் சென்றபோது அங்குள்ள தடுப்புச்சுவரில் எதிர்பாராதவிதமாக மோதியது. அந்த சமயத்தில் பின்னால் வந்த ஜீப், கார், இருசக்கர வாகனம் ஆகியவை அடுத்தடுத்து மோதிக்கொண்டன. இந்த விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இருந்தபோதிலும் அப்பகுதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே விழுப்புரம் போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று விபத்துக்குள்ளான வாகனங்களை சாலையோரமாக அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர்.
Related Tags :
Next Story