விழுப்புரத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் ரவுடி கைது
விழுப்புரத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது செய்யப்பட்டாா்.
விழுப்புரம்
விழுப்புரம் நகர போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கோபி நேற்று மாதா கோவில் பஸ் நிறுத்தம் பகுதியில் ரோந்து சென்றார். அப்போது அங்கு விழுப்புரம் பானாம்பட்டு பாதை ஊரல்கரைமேடை சேர்ந்த ரவுடி வல்லரசு (வயது 22) என்பவர் கையில் உருட்டுக்கட்டையை வைத்துக்கொண்டு அவ்வழியாக சென்ற பொதுமக்களை மிரட்டிக்கொண்டிருந்தார். இதனைப்பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் கோபி, வல்லரசுவை தட்டிக்கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த வல்லரசு, சப்-இன்ஸ்பெக்டர் கோபியை திட்டி அரசு பணியை செய்யவிடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தார். இதையடுத்து வல்லரசுவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட வல்லரசு மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
Related Tags :
Next Story