விருதுநகரில்தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி 110-வது இ-லாபி திறப்பு
விருதுநகரில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி 110-வது இ-லாபி திறக்கப்பட்டது.
விருதுநகரில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 110-வது இ-லாபி திறக்கப்பட்டது.
இ-லாபி திறப்பு
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பழமையான தனியார் வங்கி ஆகும். இந்த வங்கி தொடர்ந்து லாபம் ஈட்டி வருகிறது. வங்கி இந்தியா முழுவதும் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 530 கிளைகள், 12 மண்டல அலுவலகங்களின் மூலம் சுமார் 50 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு நிறைவான சேவையாற்றி வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 110-வது இ-லாபி விருதுநகர் வி.வி.வன்னியபெருமாள் மகளிர் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான எஸ்.கிருஷ்ணன் தலைமை தாங்கி புதிய இ-லாபியை திறந்து வைத்தார்.
டெபிட் கார்டு
தொடர்ந்து கல்லூரி மாணவிகளுக்கான பிரத்யேக டி.எம்.பி. யுவா டெபிட் கார்டை வங்கியின் நிர்வாக இயக்குனர் எஸ்.கிருஷ்ணன் அறிமுகம் செய்தார். நிகழ்ச்சியில் வருமான வரி முதன்மை ஆணையர் பி.செல்வகணேஷ், புரவலர் வி.வி.வி.ஏ.மகேந்திரன், தலைவர் டி.பழனிச்சாமி, துணைத்தலைவர் எஸ்.சிவபாலேசுவரி, செயலாளர் பி.சி.எஸ். கோவிந்தராஜபெருமாள், துணை செயலாளர் ஜி.லதா, பொருளாளர் கே.ரவிசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த டெபிட் கார்டு மூலம் மாணவிகள் கல்லூரி கட்டணம் செலுத்தவும், இதர பொருட்களும் வாங்கலாம். மேலும் கல்லூரியில் பணமற்ற பரிவர்த்தனையை முன்னெடுக்கும் முயற்சியாக இந்த டெபிட் கார்டு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
விழாவில் வங்கியின் பொதுமேலாளர் பி.சூரியராஜ், தூத்துக்குடி மண்டல மேலாளர் ஜெ.சுந்தரேஷ்குமார், வங்கி ஊழியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.