விளாத்திகுளம் பகுதியில்வெள்ளிக்கிழமை மக்கள் களம் நிகழ்ச்சி


விளாத்திகுளம் பகுதியில்வெள்ளிக்கிழமை மக்கள் களம் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 25 Oct 2023 6:45 PM GMT (Updated: 25 Oct 2023 6:45 PM GMT)

விளாத்திகுளம் பகுதியில் வெள்ளிக்கிழமை மக்கள் களம் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற உள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கனிமொழியும், நானும் (அமைச்சர் கீதாஜீவன்) நாளை மறுநாள் (சனிக்கிழமை) விளாத்திகுளம் மேற்கு பகுதியில் 'மக்கள் களம்' நிகழ்ச்சிகளில் பங்கேற்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிய உள்ளோம்.

அன்று மாலை 4 மணிக்கு சிவஞானபுரம், 5 மணிக்கு பொம்மையாபுரம், 6 மணிக்கு நமச்சிவாயபுரம், இரவு 7 மணிக்கு அருங்குளம், 8 மணிக்கு வெள்ளையம்மாள்புரம் ஆகிய பகுதிகளில் மக்களை சந்தித்து குறைகளை கேட்கின்றனர் என்று கூறி உள்ளார்.


Next Story