விளாத்திகுளம் பேரூராட்சியில்பேட்டரி வாகனங்களில் குப்பை சேகரிக்கும் பணி தொடக்கம்


விளாத்திகுளம் பேரூராட்சியில்பேட்டரி வாகனங்களில் குப்பை சேகரிக்கும் பணி தொடக்கம்
x

விளாத்திகுளம் பேரூராட்சியில் பேட்டரி வாகனங்களில் குப்பை சேகரிக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.

தூத்துக்குடி

விளாத்திகுளம்:

விளாத்திகுளம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் வீடுகளுக்கே சென்று குப்பைகளை சேகரிக்க கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.18 லட்சம் செலவில் 9 பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டன. இந்த வாகனங்களில் குப்பை ேசகரிக்கும் பணி தொடக்க நிகழ்ச்சி, பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் அய்யன் ராஜ் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல்அலுவலர் சுந்தரவேல் முன்னிலை வகித்தார். பேட்டரி வாகனங்களில் குப்பை சேகரிக்கும் பணியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து, மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இமானுவேல், மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

அதனைத் தொடர்ந்து விளாத்திகுளம் அருகே உள்ள ஊசி மேசியாபுரம் கிராமத்திலும், மாதாவரம் கிராமத்திலும் புதிய ரேஷன் கடை கட்டுவதற்கான பூமி பூஜையை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இதில் தி.மு.க நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story