விளாத்திகுளம் பொதுப்பணித்துறை குளத்தில் மரக் கன்று நடும் பணி
விளாத்திகுளம் பொதுப்பணித்துறை குளத்தில் மரக் கன்று நடும் பணியில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியை பசுமை நிறைந்த பகுதியாக மாற்றும் வகையில் சட்டமன்ற உறுப்பினர், உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள், மக்கள் மரங்கள் இயக்கம் என்ற அமைப்பு மூலமாக ஒரு கோடி மரங்கள் நடும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக விளாத்திகுளம் பேரூராட்சியில் உள்ள பொதுப்பணித்துறை குளத்தில் மரக்கன்றுகள் நடும்பணி நடந்தது. நிகழ்ச்சிக்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் அய்யன் ராஜ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் கலந்து ெகாண்டு மரக்கன்றுகளை நட்டினார். குளத்தின் கரையின் இரு புறமும் பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்பட்டு அதனை பாதுகாக்கும் வகையில் கூண்டுகள் அமைக்கப்பட்டன. மேலும் தினமும் மக்கள் இயக்கத்தின் உள்ளாட்சி பிரதிநிதிகள் இக்கன்றுகளை பராமரிப்பு செய்யும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டனர். இதேபோல் விளாத்திகுளம் அருகே உள்ள வைப்பாற்றில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியை எம்.எல்.ஏ. பார்வையிட்டார். இந்த பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. இதில் வனச்சரக அலுவலர் கவின் வனவர் பாண்டியராஜ், வைப்பார் உட்கோட்ட நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் ஸ்ரீ ராம், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் வேலுச்சாமி, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் அன்புராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இமானுவேல், மகேந்திரன், சமூக வலைதள பரப்பாளர் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்துகொண்டனர்