விளாத்திகுளம் யூனியனில் 56 பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம்
விளாத்திகுளம் யூனியனில் 56 பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் யூனியனில் 56 பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
பள்ளிகளில் காலை உணவு திட்டம்
"முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம்" குறித்து விளாத்திகுளம் யூனியன் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலர்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் பேசுகையில், விளாத்திகுளம் யூனியனிலுள்ள 35 ஊராட்சிகளில் 56 பள்ளிகளில் இந்த காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தில் உணவுகளை சுகாதாரமான முறையில் தயார் செய்ய வேண்டும். சமையலர்கள், உதவியாளர்கள், மகளிர் குழுவினர் மிகவும் கவனமாக உணவுகளை சமைத்து மாணவர்களுக்கு பரிமாற வேண்டும்.
ஊராட்சி தலைவர்கள் ஒத்துழைப்பு
இந்த காலை உணவு வழங்கும் திட்டத்திற்கு அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் முழு ஒத்துழைப்பு அளித்து நல்ல முறையில் செயல்பட உதவ வேண்டும்' என்றார்.
இந்த கூட்டத்தில் மார்க்கண்டேயன், எம்.எல்.ஏ., வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மகளிர் சுய உதவி குழுவினர், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.