விளாத்திகுளத்தில்விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


விளாத்திகுளத்தில்விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Feb 2023 12:15 AM IST (Updated: 23 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளம் பஸ்நிலையம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாயிகள் சங்க தாலுகா தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் புவிராஜ், தாலுகா செயலாளர் மலைக்கனி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் ஜோதி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் பங்கேற்ற விவசாயிகள் கைகளில் கருகிய பயிர்களுடன் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.


Next Story