விளாத்திகுளத்தில் மழைநீர் தேங்கும் பகுதிகளில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆய்வு
விளாத்திகுளத்தில் மழைநீர் தேங்கும் பகுதிகளில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி
எட்டயபுரம்:
விளாத்திகுளம் காமராஜர் நகர் 13-வது வார்டு 4-வது தெருவில் மழைநீர் தேங்கும் பகுதிகளை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அந்த பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தடுப்பது குறித்தும், வாறுகால் வசதியை மேம்படுத்துவது குறித்தும் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். உடனடியாக இதற்கான திட்டத்தை தயார் செய்து, செயல்படுத்தவும் அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார்.
ஆய்வின் போது விளாத்திகுளம் தி.மு.க நகர செயலாளர் வேலுச்சாமி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், ஆற்றங்கரை ஊராட்சி மன்ற தலைவர் சீத்தாராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story