விளாத்திகுளத்தில்கபடி போட்டி
விளாத்திகுளத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு கபடி போட்டி நடந்தது.
தூத்துக்குடி
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் சிதம்பரநகர் விளையாட்டு மைதானத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு சிதம்பரநகர் வாதிரியார் சமுதாயம் சார்பாக 36-ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான கபடி போட்டி நடந்தது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 50 அணிகள் கலந்து கொண்டன. நாக் அவுட் முறையில் நடைபெற்ற போட்டியில் இறுதிஆட்டத்திற்கு கடல்புறா வேம்பார் அணியும், நேசம்மாள் தூத்துக்குடி முத்தையாபுரம் அணியும் தகுதிபெற்றன. இந்த போட்டியில் 19-15 என்ற புள்ளிக் கணக்கில் வேம்பார் அணி வெற்றி பெற்று முதல் பரிசு தட்டிச் சென்றது. இரண்டாவது பரிசை தூத்துக்குடி முத்தையாபுரம் அணியும், மூன்றாவது பரிசை காயல்பட்டினம் அணியும் பெற்றனர்.
Related Tags :
Next Story