தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்
தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்
தேனி
தேனி அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் சேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தேனி அரசு தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாவட்ட கலந்தாய்வு மூலம் மாணவ, மாணவிகள் சேர்க்கை நடக்க உள்ளது. இதற்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க அடுத்த மாதம் (ஜூலை) 20-ந்தேதி கடைசி நாள். 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தேனி, ஆண்டிப்பட்டி, உப்பார்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் இலவசமாக விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தேனி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story