இறகுபந்து விளையாட்டில் தண்டுபத்து அனிதா குமரன் பள்ளி மாணவர்கள் மாநில போட்டிக்கு தேர்வு
இறகுபந்து விளையாட்டில் தண்டுபத்து அனிதா குமரன் பள்ளி மாணவர்கள் மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
உடன்குடி:
திருச்செந்துரில் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி நடந்தது. இதில் திருச்செந்தூர், தூத்துக்குடி, விளாத்திகுளம், கோவில்பட்டி, நாசரேத், ஸ்ரீவைகுண்டம், கழுகுமலை ஆகிய வட்டார அளவிலான போட்டியில் வெற்றி வெற்ற வீரர்கள் கலந்து கொண்டனர். 17 வயதிற்குட்பட்ட இரட்டையர்களுக்கான இறகுப்பந்து போட்டி பிரிவில் தண்டுபத்து அனிதா குமரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஹரிஹரசுதன், ஜட்சன் ஆகியோர் முதலிடம் பிடித்து மாநில அளவிலான போட்டியில் விளையாட தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி ஆசிரியர்களையும் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் பாராட்டினர். இதேபோல் உடன்குடி சல்மா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஜெப்ரெட் மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்தார். வெற்றி பெற்ற மாணவரை பள்ளி முதல்வர் சார்லஸ் ஸ்வீட்லி மற்றும் பள்ளி நிர்வாகிகள், உடற்கல்வி ஆசிரியர், ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.