முடிவுற்ற சாலை, பாலப்பணிகள் தொடக்க விழா
முடிவுற்ற சாலை, பாலப்பணிகள் தொடக்க விழா நடந்தது.
திருநெல்வேலி
இட்டமொழி:
தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி ஆர்.மனோகரன் தளபதி சமுத்திரம் ஊராட்சி இளையநயினார்குளம் ஊரில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் செய்து முடிக்கப்பட்ட ஊரின் இணைப்பு தார் சாலை, பாலம் மற்றும் பேவர் பிளாக் சாலையை திறந்து வைத்தார். அதன்பின்னர் சீவலப்பேரி ஊராட்சி பொட்டல் நகரில் பேவர் பிளாக் சாலை பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை வட்டார தலைவர்கள் கனகராஜ் (மத்தி), கணேசன் (மேற்கு), சங்கரபாண்டி (கிழக்கு), நாங்குநேரி மத்திய வட்டார தலைவர் ராமஜெயம், நாங்குநேரி மேற்கு வட்டார தலைவர் வாகைதுரை, மாவட்ட துணை செயலாளர் செல்லபாண்டி, ஜெயசீலன், சுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story