இன்னர்வீல் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா
மன்னார்குடி இன்னர்வீல் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா
மன்னார்குடி:
சர்வதேச ரோட்டரி சங்க மகளிர் பிரிவான இன்னர்வீல் சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா மன்னார்குடி நியூட்டன் கிட்ஸ் பள்ளியில் நடைபெற்றது. மன்னார்குடி இன்னர்வீல் சங்க தலைவராக நியூட்டன் கிட்ஸ் பள்ளி தாளாளர் சுகாசினி கந்தசாமி பதவியேற்றார். தமிழ்நாடு மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் சித்ரா செல்வமணி செயலாளராகவும், சுதா பாலசுப்பிரமணியன் பொருளாளராகவும், கலைவாணி செந்தில்குமார் சர்வதேச சேவை ஒருங்கிணைப்பாளராகவும் பதவியேற்றுக்கொண்டனர். கடந்த ஆண்டு தலைவர் உதயா ராம் பிரசாந்த் வரவேற்று பேசினார். தேசிய மேல்நிலை பள்ளி என்.சி.சி. அதிகாரியும், மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளருமான ச. அன்பரசு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது உலகத்தை இயக்கும் சக்கரமாக பெண்கள் உள்ளனர் என்பதை குறிக்கும் வகையில் இன்னர்வீல் சங்கம் என இந்த சங்கத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது என்றும், இந்த உலகத்திற்கு வந்து செல்பவர்கள் வரலாற்றில் மறக்கப்படுகிறார்கள். ஆனால் உலகத்துக்கு தந்து செல்பவர்கள் வரலாற்றில் நினைவு கூறப்படுகிறார்கள் என்று கூறினார். நிகழ்ச்சியில் மன்னார்குடி ரோட்டரி சங்க தலைவர் சங்கர், மாவட்ட ஆளுநர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் செயலாளர் கவுசல்யா அன்பரசு நன்றி கூறினார்.