வேதாரண்யத்தில், மாணவிகள் விடுதி திறப்பு விழா
வேதாரண்யத்தில், மாணவிகள் விடுதி திறப்பு விழா
நாகப்பட்டினம்
வேதாரண்யத்தில் அரசு கலை கல்லூரியில் தங்கி பயிலும் மாணவிகளுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் ரூ.3 கோடியே 12 லட்சம் செலவில் 100 மாணவிகள் தங்கும் வகையில் 23 அறைகளுடன் மாணவிகள் விடுதி கட்டப்பட்டது. இந்த விடுதியை நேற்று காணொலிக்காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். வேதாரண்யத்தில் நடந்த விழாவில் தமிழக மீன்வளத்துறை தலைவர் கவுதமன் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றினார். விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, வேதாரண்யம் கோட்டாட்சியர் ஜெயராஜ பவுலின், மாவட்ட பிற்படுத்தபட்டோர் நல அலுவலர் சங்கர், சமூக திட்ட தாசில்தார் ரமேஷ், நகர்மன்ற தலைவர் புகழேந்தி மற்றும் வருவாய்த்துறையினர், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story