சிதம்பரத்தில், அதிநவீன வசதிகளுடன் கூடிய ஆராதியா ஸ்கேன் சென்டர் திறப்பு விழா
சிதம்பரத்தில், அதிநவீன வசதிகளுடன் கூடிய ஆராதியா ஸ்கேன் சென்டர் திறப்பு விழா நடைபெற்றது.
சிதம்பரம்,
சிதம்பரம் கீழவீதி அருகே தேரடி பிள்ளையார் கோவில் தெரு வீனஸ் பள்ளி எதிரில் அதிநவீன வசதிகளுடன் புதிதாக அமைக்கப்பட்ட ஆராதியா ஸ்கேன் சென்டர் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு டாக்டர் ஆனந்த் தலைமை தாங்கினார். டாக்டர் ரம்யா அனைவரையும் வரவேற்றார். விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக விருத்தாசலம் தொழிலதிபர் சங்கர், ராணி ஆகியோர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி புதிய ஸ்கேன் சென்டரை திறந்து வைத்தனர். அதைத்தொடர்ந்து சிதம்பரம் வீனஸ் குழுமப் பள்ளிகளின் தாளாளர் வீனஸ் குமார், தொழிலதிபர் சேகர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி, விழாவை தொடங்கி வைத்தனர். திறப்பு விழா குறித்து டாக்டர் ஆனந்த் கூறுகையில், இந்த புதிய அதிநவீன வசதி கொண்ட ஸ்கேன் சென்டரில் சி.டி. ஸ்கேன் ரத்த பரிசோதனை மையம், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எக்ஸ்ரே, இ.சி.ஜி. உள்பட அனைத்து விதமான மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்படும் என்றார். விழாவில் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் பாஸ்கரன், சிதம்பரம் கண்ணா எலும்பு முறிவு மருத்துவமனை டாக்டர் பாரதிசெல்வன், துரை. கிருஷ்ணமூர்த்தி நினைவு மருத்துவமனை டாக்டர் குமரகுரு, ஸ்ரீ கிருஷ்ணா கிராண்ட் மஹால் உரிமையாளர் சம்பத் உள்பட சிதம்பரம் நகர முக்கியஸ்தர்கள், டாக்டர்கள், மருத்துவ உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.