ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் திறப்பு விழா
நாகலாபுரம் புதூரில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் திறப்பு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி
எட்டயபுரம்:
நாகலாபுரம் புதூரில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் திறப்பு விழா நடந்தது. மன்றத்தை ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர் சக்தி.முருகன் திறந்து வைத்து தீபம் ஏற்றினார். குரு பூஜை, விநாயகர் பூஜையுடன் தொடங்கிய விழாவில் விவசாயம் சிறக்கவும், மக்கள் நலமுடன் வாழவும் வேண்டி 108, 1008 தமிழ் மந்திரங்கள் கூறி குங்கும அர்ச்சனை செய்து பெண்கள் வழிபட்டனர். இதனைத்தொடர்ந்து ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகளாக வேஷ்டி, சேலைகள் வழங்கப்பட்டது. அடிகளார் வளர்க்கும் ஆன்மிகத்தில் பெண்குலத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் என்ற தலைப்பில் இணைச்செயலாளர் முத்தையா ஆன்மிக சொற்பொழிவாற்றினார். விழாவில், மாவட்ட பொருளாளர் கண்ணன், வட்ட தலைவர் தேவராஜூலு, மன்ற தலைவி எல். துர்க்காதேவி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story