வேளாண் விரிவாக்க மைய கட்டிடம் திறப்பு விழா
நாகமங்கலத்தில வேளாண் விரிவாக்க மைய கட்டிடம் திறப்பு விழா நடந்தது
குத்தாலம்:
குத்தாலம் அருகே நாகமங்கலத்தில் ரூ1.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட வேளாண் விரிவாக்க மைய கட்டிடம் திறப்பு விழா நடந்தது. இந்த கட்டிடத்தை ெசன்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.அதனைத் தொடர்ந்து வேளாண் விரிவாக்க மைய கட்டிடத்தில் நடந்த விழாவிற்கு மயிலாடுதுறை உதவி கலெக்டர் யுரேகா தலைமை தாங்கினார்.தி.மு.க. குத்தாலம் வடக்கு ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன் முன்னிலை வகித்தார். வேளாண்மை இணை இயக்குனர் மதியரசன் வரவேற்றார். எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், ராஜகுமார் ஆகியோர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி வைத்து பேசினர். இதில் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன், துணை தலைவர் முருகப்பா, வேளாண்மை அலுவலர் வளர்மதி, துணை வேளாண்மை அலுவலர் ராஜன், பழைய கூடலூர் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியன், முருகமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வேளாண்மை உதவி இயக்குனர் வெற்றிவேலன் நன்றி கூறினார்.