கலைஞர் அறிவக கட்டிட திறப்பு விழா


கலைஞர் அறிவக கட்டிட திறப்பு விழா
x

தக்கோலத்தில் கலைஞர் அறிவக கட்டிடத்தை அமைச்சர் காந்தி திறந்து வைத்தார்.

ராணிப்பேட்டை

தக்கோலம் தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி கட்டப்பட்ட கலைஞர் அறிவக கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தக்கோலம் தி.மு.க. செயலாளரும், பேரூராட்சி மன்ற தலைவருமான எஸ்.நாகராஜன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளரும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தி கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

இதனை தொடர்ந்து அரக்கோணம் பழைய பஸ் நிலையம் அருகே கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா மற்றும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் ஆர்.காந்தி புதிய உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் அரக்கோணம் நகர செயலாளர் வி.எல்.ஜோதி, தலைமை செயற்குழு உறுப்பினர் மு.கன்னையன், நகர அவைத்தலைவர் துரை.சீனிவாசன், அரக்கோணம் ஒன்றிய செயலாளர்கள் தமிழ்செல்வன், பசுபதி, நிர்வாகிகள் ராஜ்குமார், பாரி, ஆர்.பி.ராஜா மற்றும் பலர் உடனிருந்தனர்.


Next Story