தூய்மை நகருக்கான மதிப்பீடு திட்ட தொடக்க விழா


தூய்மை நகருக்கான மதிப்பீடு திட்ட தொடக்க விழா
x

மேல்விஷாரம் நகராட்சி தூய்மை நகருக்கான மதிப்பீடு திட்ட தொடக்க விழா நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகராட்சி தூய்மை பாரத இயக்கம் 2023-ம் ஆண்டிற்கான தூய்மை நகருக்கான மதிப்பீடு திட்டத்தின் தொடக்க விழா நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நகரமன்ற தலைவர் எஸ்.டி.முகமது அமீன் தலைமை தாங்கினார். ஆணையாளர் பிரீத்தி, துணைத்தலைவர் குல்சார் அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொறியாளர் பாபு வரவேற்றார்.

இதில் பொது சுகாதார பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. சிறந்த பயிற்சியாளர்களை கவுரவித்து சான்றுகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன. சி.அப்துல் அக்கீம் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு சிறந்த சமூக சேவை சான்று வழங்கப்பட்டது. இதில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துப்புரவு ஆய்வாளர் உமாசங்கர் நன்றி கூறினார்.


Next Story