ரூ.8 லட்சத்தில் புனரமைக்கப்பட்ட சமுதாய நலக்கூடம் திறப்பு
சத்துவாச்சாரியில்ரூ.8 லட்சத்தில் புனரமைக்கப்பட்ட சமுதாய நலக்கூடத்தை எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
வேலூர்
வேலூர் சத்துவாச்சாரி தாட்கோ நகரில் சமுதாய நலக்கூடம் உள்ளது. இதனை புதுப்பித்து தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.8 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் சமுதாய நலக்கூடம் பல்வேறு வசதிகளுடன் புனரமைக்கப்பட்டது.
அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. எம்.எல்.ஏ. கார்த்திகேயன் தலைமை தாங்கி சமுதாயக்கூடத்தை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி நியமன குழு உறுப்பினர் கணேஷ்சங்கர், கவுன்சிலர் அமலாரீகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
--
Related Tags :
Next Story