நுகர்வோர் மன்ற தொடக்க விழா


நுகர்வோர் மன்ற தொடக்க விழா
x

புத்தூர்வயல் அரசு பள்ளியில் நுகர்வோர் மன்ற தொடக்க விழா நடந்தது.

நீலகிரி

கூடலூர்,

கூடலூர் புத்தூர்வயல் அரசு உயர்நிலை பள்ளியில் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் மற்றும் பள்ளி நிர்வாகம் சார்பில், குடிமக்கள் நுகர்வோர் மன்ற தொடக்க விழா மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற பொறுப்பாசிரியர் பிரதீப் வரவேற்றார். தலைமை ஆசிரியர் கண்ணன் தலைமை தாங்கி பேசும்போது, மாணவர்கள் நுகர்வோர் விழிப்புணர்வு பெற்று தரமான சமுதாயம் உருவாக குடிமக்கள் நுகர்வோர் மன்றம் உருவாக்கப்பட்டு உள்ளது.

மாணவர்கள் தரமான பொருட்களை வாங்குவதற்கு பெற்றோர்களுக்கு உதவியாக இருக்க விழிப்புணர்வு அவசியம் என்றார். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது, நுகர்வோர் கல்வி ஏமாற்றங்களில் இருந்து தற்காத்து கொள்ள உதவுகின்றது. தற்போது நவீன முறையில் மோசடிகள் நடைபெறுகிறது. இதை தவிர்க்க விழிப்போடு இருத்தல் அவசியம். முறையான சத்தான உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார். இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.


Next Story