கோவில்பட்டி வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பு தொடக்க விழா


கோவில்பட்டி வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பு தொடக்க விழா
x
தினத்தந்தி 9 Jun 2023 12:15 AM IST (Updated: 9 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பு தொடக்க விழா நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் இடுபொருள் பட்டய படிப்பிற்கான தொடக்க விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு நிலைய தலைவர் பேராசிரியர் கோ.பாஸ்கர் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் மனோகரன் வரவேற்றார். கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தொலைதூர கல்வி இயக்குனரக இயக்குனர் பாலசுப்பிரமணியம், வேளாண் இடுபொருள் பட்டயப் படிப்பை தொடங்கி வைத்து அதன் முக்கியத்துவம் குறித்து பேசினார். வேளாண் இடுபொருள் பட்டயப் படிப்பு முக்கியத்துவம், பயிற்சி முறைகள் மற்றும் வகுப்புகள் எடுக்கப்படும் முறை மற்றும் பயன்பாடு குறித்து தொலைதூர கல்வி இயக்குனரக பேராசிரியர் சந்திரசேகரன் பேசினார். வேளாண் இடுபொருள் பட்டயப் படிப்பு வகுப்புகள் நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது.

கோவில்பட்டி வட்டார இடு பொருள் விற்பனை மைய சங்க தலைவர் வெங்கடேஷ், பேராசிரியர்கள் ஆனந்தி, புவனேஸ்வரி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். உதவி பேராசிரியர் வி.சஞ்சீவ் குமார் நன்றி கூறினார். விழாவில் வேளாண் இடுபொருள் பட்டயப் படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story