நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடக்கம்
இலுப்பைதண்டலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டது.
ராணிப்பேட்டை
நெமிலி ஊராட்சி ஒன்றியம், இலுப்பை தண்டலத்தில் புதுப்பிக்கப்பட்ட ஊராட்சி மன்ற கட்டிடம் மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடந்தது. நெமிலி ஒன்றியக்குழு தலைவர் பெ.வடிவேலு தலைமை தாங்கி ஊராட்சி மன்ற கட்டிடத்தை திறந்து வைத்து, நேரடி நெல் கொள்முதல் நிலையத்தையும் தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் இலுப்பைத்தண்டலம், ஆட்டுப்பாக்கம், கீழ்வெங்கடாபுரம், அரிகிலபாடி, கடம்பநல்லூர், பின்னாவரம் ஆகிய கிராம விவசாயிகள் பயன் பெறுவார்கள்.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் அனுசுயா மகாலிங்கம், ஒன்றியக்குழு உறுப்பினர் விநாயகம், துணைத் தலைவர் எழில்வாணி குருநாதன், ஊராட்சி எழுத்தர் கன்னியப்பன், முஹம்மது அப்துல்ரஹ்மான், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story