வாகனங்களுக்கு எரிவாயு நிரப்புவதன் தொடக்க விழா


வாகனங்களுக்கு எரிவாயு நிரப்புவதன் தொடக்க விழா
x

வாகனங்களுக்கு எரிவாயு நிரப்புவதன் தொடக்க விழா நடந்தது.

ராணிப்பேட்டை

வாலாஜா ஒன்றியம், மாந்தாங்கல் பகுதியில் அமைந்துள்ள ஏ.ஜி. மற்றும் பி.பிரதம் என்ற தமிழ்நாட்டின் முதலாவது திரவ நிலை அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து மாந்தாங்கல் பகுதியில் அமைந்துள்ள எரிவாயு நிலையத்தில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி, ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர் பாண்டியன் ஆகியோர் வாகனங்களுக்கு எரிவாயு நிரப்புவதை தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றியக் குழு தலைவர் சேஷா வெங்கட், நகர மன்ற தலைவர்கள் சுஜாதா வினோத், ஹரிணி தில்லை, நிறுவனத்தின் மனித வள மேலாண்மை தலைவர் செந்தில், டொமிடோ ஒசககாஸ், மண்டல தலைவர் வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story