உப்பிலியபுரத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
உப்பிலியபுரத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
திருச்சி
உப்பிலியபுரம் அருகே பி.மேட்டூர், கோட்டப்பாளையம், வைரிசெட்டிப்பாளயம், எரகுடி, ஆலத்துடையான்பட்டி, தங்கநகர் கோட்டப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே அரசு நெல்கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் உப்பிலியபுரம் செல்லாயி அம்மன் திடலில் புதிய நெல் கொள்முதல் நிலையத்தை துறையூர் எம்.எல்.ஏ. ஸ்டாலின்குமார் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உப்பிலியபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துச்செல்வன், தெற்கு ஒன்றிய செயலாளர் அசோகன். உப்பிலியபுரம் நகர செயலாளர் நடராஜன், பேரூராட்சி தலைவர் சசிகலாராஜசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story