கடலூர் நீதிமன்ற வளாகத்தில் சட்ட ஆலோசனை பாதுகாப்பு அலுவலகம் திறப்பு விழா
கடலூர் நீதிமன்ற வளாகத்தில் சட்ட ஆலோசனை பாதுகாப்பு அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.
கடலூர், விழுப்புரம் உள்பட 14 மாவட்டங்களில் அமைக்கப்பட்ட சட்ட ஆலோசனை பாதுகாப்பு மற்றும் அமைப்பு அலுவலகத்தை சென்னை உயர்நீதிமன்ற (பொறுப்பு) தலைமை நீதிபதியும், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயல் தலைவருமான ராஜா நேற்று காணொலி மூலமாக திறந்து வைத்தார். இதையடுத்து கடலூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்ட சட்ட ஆலோசனை பாதுகாப்பு மற்றும் அமைப்பு அலுவலகத்தை, கடலூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஜவகர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
நீதிபதி சுபா அன்புமணி, போக்சோ நீதிமன்ற நீதிபதி எழிசட்ட ஆலோசனை பாதுகாப்பு அலுவலகம்லரசி, எஸ்.சி., எஸ்.டி. நீதிமன்ற நீதிபதி உத்தமராஜ், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பிரபாகர், முதன்மை சார்பு நீதிபதியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளருமான லிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் இரண்டாவது கூடுதல் சார்பு நீதிமன்ற நீதிபதி மோகன்ராஜ், குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-1 வனஜா, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-3 ரகோத்தமன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி கமலநாதன், கடலூர் பார் அசோசியேசன் தலைவர் துரை பிரேம்குமார், செயலாளர் செல்வகுமார் மற்றும் லாயர் அசோசியேஷன் தலைவர் ராமநாதன், செயலாளர் ராம் சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வரும் அனைத்து நீதிமன்றங்களிலும் குற்ற வழக்குகளில் சிறையில் உள்ள சிறைவாசிகள் மற்றும் குற்ற வழக்குகள் நடத்த வசதி இல்லாத வழக்காளிகளுக்கு வழக்குகள் நடத்தவும், ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யவும் இந்த அலுவலகம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே தேவைப்படுபவர்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழு தலைவர் தெரிவித்தார்.