நவீன சுகாதார வளாகம் திறப்பு விழா
சுரண்டை பஸ் நிலையத்தில் நவீன சுகாதார வளாகம் திறப்பு விழா நடந்தது.
சுரண்டை:
சுரண்டை பஸ் நிலைய வளாகத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நவீன சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு சுரண்டை நகராட்சி தலைவர் ப.வள்ளிமுருகன் தலைமை தாங்கினார். ஆணையாளர் முகம்மது சம்சுதீன், நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால், நகர தி.மு.க. செயலாளர் ஜெயபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு ஒப்பந்ததாரர் சவுந்தர் அனைவரையும் வரவேற்றார். தென்காசி எம்.எல்.ஏ. எஸ்.பழனிநாடார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நவீன சுகாதார வளாகத்தை திறந்து வைத்தார்.
விழாவில் முன்னாள் தி.மு.க. நகர செயலாளர் முத்துக்குமார், கு.ஆறுமுகசாமி, நிர்வாகிகள் பூல்பாண்டியன், சுப்பிரமணியன், நகராட்சி உறுப்பினர்கள் பாலசுப்ரமணியன், அமுதா சந்திரன், ராஜ்குமார், உஷாபிரபு, வேல் முத்து, ராஜேஷ், அந்தோணிசுதா ஜேம்ஸ், செல்வி, சிவசண்முக ஞானலெட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.