நாட்டு நலப்பணி திட்ட தொடக்க விழா


நாட்டு நலப்பணி திட்ட தொடக்க விழா
x

நாட்டு நலப்பணி திட்ட தொடக்க விழா நடந்தது.

கரூர்

வெள்ளியணை திருமலைநாதன்பட்டியில் உள்ள ஸ்ரீ அமராவதி கலை அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணிதிட்ட தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு கல்லூரியின் தாளாளரும், ஆடிட்டருமான வெங்கடாசலம் தலைமை தாங்கினார். செயலாளர் நாராயணசாமி முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக கரூர் அரசு கலைக்கல்லூரியின் உதவிப்பேராசிரியர் செந்தில்குமார் கலந்து கொண்டு, நாட்டு நலப்பணி திட்டத்தை தொடங்கி வைத்து, திட்டத்தின் நோக்கம் குறித்து விரிவாக எடுத்து கூறினார்.

இதில், கல்லூரியின் கல்வி ஒருங்கிணைப்பாளர் உஷா ரவிச்சந்திரன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் விக்னேஷ், ரேவதி, முதலாமாண்டு நாட்டு நலப்பணி திட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story