பா.ஜனதா சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு


பா.ஜனதா சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
x
தினத்தந்தி 28 April 2023 12:15 AM IST (Updated: 28 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரத்தில் பா.ஜனதா சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ராமேசுவரம் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வருவதால் பொதுமக்களும், பக்தர்களும் அவதி அடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நகர் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் நீர்மோர் பந்தல் வைக்கப்பட்டுள்ளது. இந்த நீர் மோர் பந்தலை நேற்று பா. ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் தரணி முருகேசன் திறந்து வைத்து பக்தர்களுக்கு நீர்மோர் மற்றும் சர்பத் வழங்கி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கட்சியின் நகர் தலைவர் ஸ்ரீதர், மாவட்ட பொதுச் செயலாளர்கள் பவர் நாகேந்திரன், கணபதி, மணிமாறன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், ரவி, நகர் பொதுச்செயலாளர்கள் முருகன், நம்புச்செல்வம், நகர் பொருளாளர் சுரேஷ், மண்டபம் ஒன்றிய தலைவர் கதிரவன், நகர் செயலாளர் கணேசன், கிளைத்தலைவர் சுப்பு ராமகிருஷ்ணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story