புதிய அங்கன்வாடி கட்டிடம் திறப்பு


புதிய அங்கன்வாடி கட்டிடம் திறப்பு
x

புதிய அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட சித்துராஜபுரம் பஞ்சாயத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.11 லட்சத்து 50 ஆயிரம் செலவில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையம் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பஞ்சாயத்து தலைவர் லீலாவதி சுப்புராஜ் தலைமை தாங்கினார். பஞ்சாயத்து செயலர் அருள்ராஜ் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிவகாசி யூனியன் துணைத்தலைவர் விவேகன்ராஜ் அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புகழேந்தி, தேவ ஆசீர்வாதம், ஒன்றிய கவுன்சிலர்கள் விஜயலட்சுமி உதயசங்கர், ராஜம்மாள்சுப்புராஜ், ஊராட்சி துணைத்தலைவர் காளிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story