புதிய அங்கன்வாடி மையம் திறப்பு விழா


புதிய அங்கன்வாடி மையம் திறப்பு விழா
x

புதிய அங்கன்வாடி மையம் திறப்பு விழா நடந்தது

திருநெல்வேலி

பேட்டை:

மானூர் யூனியன் அலங்காரபேரி பஞ்சாயத்து சமூகபுரத்தில் ரூ.10 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது. மானூர் யூனியன் தலைவர் ஸ்ரீலேகா அன்பழகன் தலைமை தாங்கி, புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார். விழாவில் மானூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் அன்பழகன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தனலட்சுமி, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜபிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து சமூகபுரம் ஆதிதிராவிடர் காலனியில் உள்ள குடியிருப்புகளை யூனியன் தலைவர் ஸ்ரீலேகா அன்பழகன் பார்வையிட்டார். தொடர்ந்து அங்கு சேதமடைந்த குடியிருப்புகளை புதுப்பிக்க நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.


Next Story