புதிய உயர் மட்ட பாலம் கட்டுமான பணி தொடக்க விழா


புதிய உயர் மட்ட பாலம் கட்டுமான பணி தொடக்க விழா
x

களக்காடு அருகே புதிய உயர் மட்ட பாலம் கட்டுமான பணி தொடக்க விழா நடந்தது.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு அருகே உள்ள மேலக்காடுவெட்டியில் பச்சையாற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. கடந்தாண்டு பெய்த மழையின் காரணமாக பச்சையாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மேலக்காடுவெட்டி தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதையடுத்து சேதமடைந்த தரைப்பாலத்தை அகற்றி விட்டு, புதிதாக உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து புதிய பாலம் கட்ட நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.3.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி புதிய உயர்மட்ட பாலம் கட்டுமான பணிகள் தொடக்க விழா நடந்தது. களக்காடு யூனியன் ஆணையாளர் மங்கையர்கரசி தலைமை தாங்கினார். கீழக்காடுவெட்டி பஞ்சாயத்து தலைவி ஜெயசீலி அப்பாத்துரை பணியை தொடங்கி வைத்தார். இதில் யூனியன் உதவி பொறியாளர் அம்மையப்பன், பஞ்சாயத்து துணைத்தலைவர் செல்லப்பாண்டி, கவுன்சிலர்கள் டல்சிபாய், முத்துலட்சுமி, ஏசுபாதம், ஆண்ட்ரூஸ்ஜெபர்சன், பாலாலட்சுமி, பஞ்சாயத்து செயலாளர் அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story