புதிய ரேஷன் கடை திறப்பு விழா
புஷ்பவனம் ஊராட்சியில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது.
நாகப்பட்டினம்
கரியாப்பட்டினம்:
வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனம் ஊராட்சியில் தும்மாச்சி தெரு திரவுபதியம்மன் கோவில் அருகில் உள்ள சமுதாய கூடத்தில் புதிதாக ரேஷன் கடை திறக்கப்பட்டது. விழாவிற்கு தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.சதாசிவம் தலைமை தாங்கி ரேஷன் கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார். பின்னர் பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார். இதில் தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் உமா செந்தாமரைச்செல்வன், ஊராட்சி மன்ற தலைவர் நாடிமுத்து, ஒன்றிய கவுன்சிலர் ஆர்.கே.ராஜா, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் சுரேஷ், கூட்டுறவு சங்க செயலாளர் ராமமூர்த்தி மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், இயக்குனர்கள், தி.மு.க. கிளை கழக செயலாளர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story