புதிய மின்மாற்றி தொடக்க விழா


புதிய மின்மாற்றி தொடக்க விழா
x

நாங்குநேரி யூனியன் இலங்குளம் பஞ்சாயத்தில் புதிய மின்மாற்றி தொடக்க விழா நடந்தது.

திருநெல்வேலி

இட்டமொழி:

நாங்குநேரி யூனியன் இலங்குளம் பஞ்சாயத்து பாரதிநகர்-காமராஜ்நகர் பகுதிகளில் மின்னழுத்த குறைபாட்டை சரி செய்வதற்காக மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் எஸ்.ராஜன்ராஜ் உத்தரவின்பேரில், கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் (பொறுப்பு) அலெக்சாண்டர் மேற்பார்வையில், ரூ.3½ லட்சத்தில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது. இதன் தொடக்க விழா நடந்தது.

நாங்குநேரி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் எஸ்.ஆரோக்கிய எட்வின் தலைமை தாங்கி, புதிய மின்மாற்றியை இயக்கி தொடங்கி வைத்தார். உதவி செயற்பொறியாளர் ஜெயசீலன், உதவி பொறியாளர் சிவ சிவலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story