ஊட்டச்சத்து தொழில்நுட்ப திட்ட தொடக்க விழா


ஊட்டச்சத்து தொழில்நுட்ப திட்ட தொடக்க விழா
x

கறவை மாடுகளுக்கான ஊட்டச்சத்து தொழில்நுட்ப திட்ட தொடக்க விழா நடந்தது

திருநெல்வேலி

நெல்லை கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கால்நடை ஊட்டச்சத்தியல் துறை சார்பில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் 2-ம் பகுதியின் நம்பியாறு உபவடி நிலப்பகுதி திட்ட பயனாளிகளுக்கான "கறவை மாடுகளின் பால் உற்பத்தியை அதிகரிக்கும் தனுவாஸ் ஊட்டச்சத்து தொழில்நுட்பங்களை பால் பண்ணையாளர்களிடம் பிரபலப்படுத்துதல்" திட்ட தொடக்க விழா மற்றும் இடுபொருட்கள் வழங்கும் விழா திருக்குறுங்குடி கிராமத்தில் நடைபெற்றது. நெல்லை கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் செல்லப்பாண்டியன் தலைமை தாங்கி பயனாளிகளுக்கு தனுவாஸ் கிராண்ட் ஊட்டச்சத்தை வழங்கினார். கால்நடை விரிவாக்க கல்வி துறை இணை பேராசிரியர் திலகர் வரவேற்றார். கால்நடை ஊட்டச்சத்தியல் துறை தலைவர் அருள்நாதன், பயனாளிகளுக்கு திட்ட செயல்பாடுகள் பற்றியும், தனுவாஸ் கிராண்ட் ஊட்டச்சத்தை பயன்படுத்தும் வழிமுறைகள் பற்றியும் விளக்கவுரை ஆற்றினார். திருக்குறுங்குடி டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை மண்டல இயக்குனர் முருகன் வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில் நம்பியாறு உபவடி நிலப்பகுதியை சேர்ந்த கால்நடை வளர்ப்போர் 64 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.


Next Story