நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா
ஆலங்குளம் அருகே நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே காளாத்திமடம் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. ஆலங்குளம் யூனியன் தலைவர் திவ்யா மணிகண்டன் தலைமை தாங்கினார். குத்தப்பாஞ்சான் பஞ்சாயத்து தலைவர் ஜெயராணி குமார் முன்னிலை வகித்தார். பாப்பாக்குடி ஒன்றிய செயலாளர் மாரிவண்ணமுத்து வரவேற்றார்.
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார்.
விழாவில் அவர் பேசுகையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் தொடங்கப்பட்ட இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் வாயிலாக விவசாயிகள் நெல் மூட்டைகளை நேரடியாக அரசுக்கு கொள்முதல் செய்வதனால் கூடுதல் வருவாய் கிடைக்கிறது. 40 கிலோ கொண்ட ஒரு மூட்டை நெல்லிற்கு கொண்டு வரும் நெல்லின் தரத்தை பொறுத்து ரூ.2160 மற்றும் ரூ.2115 ஆகிய விலைகளில் விவசாயிகளுக்கு நேரடியாக வழங்கப்படுகிறது. இப்படி நேரடியாக வழங்கும் பட்சத்தில் ஏஜெண்டுகள் தலையீடு இல்லாமல் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கிறது. எனவே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தங்களது நெல் மூட்டைகளை வழங்கி பயன்பெற வேண்டும்" என்றார்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் திலகராஜ், தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக பட்டியல் எழுத்தர் திருமுருகன், பஞ்சாயத்து துணை தலைவர் சுப்புராஜ், ஊராட்சி செயலாளர் கதிரவன் மற்றும் ஊர் பொதுமக்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.