புளியரையில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
புளியரையில் நெல் கொள்முதல் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
செங்கோட்டை:
செங்கோட்டை அருகே உள்ள புளியரையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் நேற்று திறந்து வைத்தார். இங்கு நெல் சன்ன ரகம் ஒரு கிலோ 21 ரூபாய் 60 பைசாக்கும், மோட்டா ரகம் 20 ரூபாய் 15 பைசாவுக்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. இதன்மூலம் 250 முதல் 300 விவசாயிகள் பயனடைவர். இங்கு 1,900 டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்மலர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகானந்தம், செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் ஷேக் முகைதீன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் ராஜேஷ், நிர்வாக அலுவலர்கள் கற்பகவல்லி, வெங்கடேஷ், செங்கோட்டை தாசில்தார் கந்தசாமி மாவட்ட கலெக்டர் அலுவலக வேளாண்மை அலுவலர் சிவமுருகன், புளியரை ஊராட்சி மன்ற தலைவர் அழகிய திருச்சிற்றம்பலம், துணைத்தலைவர் லட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் சிக்கந்தர் பீவி, விவசாய சங்க தலைவர் செல்லத்துரை மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.